2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

மல்லிகா சாமியார்

George   / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்ச்சைகளில் சிக்கி, உலகிலுள்ள எல்லா ஊடகங்களிலும் தலைப்புச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கும் பெண் சாமியாரான 'ராதே மா' வின் வாழ்க்கை விரைவில் பொலிவூட் திரைப்படமாகின்றது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் சாமியார் ராதே மாவுக்கு, 50க்கும் அதிகமான நாடுகளில் தீவிர பக்தர்கள் உள்ளனர். 23ஆம் வயதில் சாமியார் ஆன இவர், பக்தர்களை கட்டிப்பிடித்து, முத்தம் தந்து ஆசி வழங்குவார்.

மறைந்த பிரமோத் மகாஜனின் மகன், ராகுல் மகாஜன், தனது டுவிட்டர் பக்கத்தில், அண்மையில் ராதே மா புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மினி ஸ்கர்ட் உடையில், சோபாவில், தொடைகள் தெரியும்படி, தலையில் சிவப்புத் தொப்பி அணிந்து, சினிமா நடிகை போன்று ஸ்டைலாக நின்றபடி ராதே மா போஸ் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், ராதே மா குறித்த திரைப்படம், பொலிவூட்டில் விரைவில் வெளியாக உள்ளது. ராதே மா கேரக்டரில், நடிகை மல்லிகா ஷெராவத் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை, ரஞ்ஜித் சர்மா தயாரிப்பில், விக்கி ரனாவத் இயக்கவுள்ளார். ராகுல் மகாஜன், டோலி பிந்தரா, பூனம் ஜான்வார் உள்ளிட்டோர் இந்தத் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .