2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

3 இடியட்ஸ் நாயகனாகிறார் சூர்யா...

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 13 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஷங்கர் இயக்குவதாக கூறப்படும் 3 இடியட்ஸ் ரீமேக்கிலிருந்து விஜய் விலகிக்கொண்ட நிலையில் அதன் புதிய கதாநாயகனாக சூர்யா தெரிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. அமீர் கான் வேடத்தில் விஜய் நடிப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் படப்படிப்புக்கு கிளம்பிய வேகத்திலேயே வீடு வந்து சேர்ந்தார் விஜய்.

படத்தில் தனது கதாபாத்திரத்துக்காக நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால் அந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் விஜய் என செய்திகள் வெளியாகின.இதற்கு விளக்கமளித்த விஜய், "இந்தப் படத்தில் நான் இருக்கிறேனா இல்லையா என்பதை படத்தின் தயாரிப்பாளர்தான் தீர்மானிக்க வேண்டும்" என அனைவரையும் குழப்பினார்.

இந்த நிலையில், 3 இடியட்ஸ் ரீமேக்கில் விஜய்க்கு பதில் சூர்யா நடிப்பார் என்றும் இதுகுறித்து அவரிடம் இயக்குநர் ஷங்கர் பேசி முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சூர்யா "இந்தப் படத்தில் முதலில் நான்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் பின்னர் விஜய் நடிப்பதாகக் கூறப்பட்டது" என்பதோடு நிறுத்திக் கொண்டார்.

"அட யார்தான் நடிக்கிறீங்கன்னு சொல்லித் தொலைங்கப்பா... பெரிய இராணுவம் இரகசியம் பாருங்க" என்று கூறுமளவுக்கு ரசிகர்கள் தற்போது சலிப்படைந்துள்ளார்கள்.


  Comments - 0

 • G.nanthakumar Monday, 13 December 2010 10:49 PM

  ஆண்டி ஆண்டாள் என்ன அரசன் ஆண்டாள் என்ன

  Reply : 0       0

  riyas Tuesday, 14 December 2010 03:20 PM

  மூன்று மடையர்கள் வருமுன்னர் எத்தனை ஆட்களை மடையர்களாக ஆக்கபோகிரார்களோ தெரியது

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--