2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

அக்குரஸ்ஸ விபத்தில் 52பேர் காயம்

Menaka Mookandi   / 2017 மே 19 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்குரஸ்ஸ - காலி வீதியின் கியாடுவ பகுதியில், இன்று காலை 8.10 மணியளவில் இடம்பெற்ற பஸ் விபத்தொன்றில், 52 பயணிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறையிலிருந்து அக்குரஸ்ஸ நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றும் அக்குரஸ்ஸயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியே, விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில், இரு பஸ்களிலும் பயணித்த பயணிகளில் 52பேரே காயமடைந்த நிலையில், அக்குரஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், ஆபத்தான நிலையில் இருந்த அறுவர், மேலதிக சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் 21 ஆண்களும் 31 பெண்களும் அடங்குகின்றனர். அவர்களில், இரு பஸ்களின் சாரதிகளும் உள்ளடங்குவதாகவும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அக்குரஸ்ஸ பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .