2021 ஜனவரி 16, சனிக்கிழமை

அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் கைது

Editorial   / 2019 நவம்பர் 23 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாள உலகக் குழு உறுப்பினரான அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் மூன்று பேர், கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, முல்லேரியா, அம்பதலே பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து ஒரு கிலோ 600 கிராம் கேளர கஞ்சா தொகை, விசேட அதிரடிப் படையின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக முல்லேரியா பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .