2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

அடையாள அட்டை விநியோகத்துக்கு குறுந்தகவல் சேவை

Editorial   / 2020 ஜனவரி 14 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய அடையாள அட்டைகளை விநியோகம் தொடர்பில் குறுந்தகவல் சேவையை அறிமுகப்படுத்த கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் முழுமைப்படுத்தப்பட்டதன் பின்னர் , அவை தொடர்பில் தொலைபேசிகளூடாக அறிவிப்பதற்காக குறுந்தகவல் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதனை ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்தார்.

அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்கில், எதிர்வரும் சில வாரங்களில் குறுந்தகவல் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த நடவடிக்கை ஊடாக, தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள வருகை தருவோர் தமது நேரத்தை மீதப்படுத்திக்கொள்ள முடியுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--