2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

அட்டைகளில் சுருட்டிய இருவர் கைது

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னியக்க பணம் பெறும் இயந்திரங்களில், 192 அட்டைகளை (ஏ.டி.எம் காட்) பயன்படுத்தி, சுமார் 50 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகையைத் திருடியதாகக் கூறப்படும் 29, 33 வயதுகளையுடைய இருவரை, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். அவ்விருவரையும் கைது செய்யும் போது, அவர்களிடமிருந்து 4 கிராம் 1 மில்லிகிராம் ஹெரோய்ன், இரண்டு துப்பாக்கிகள்,

தோட்டாக்கள், 192 அட்டைகள் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர். 

ஒருவர் பிலியந்தல பகுதியிலும், மற்றையவர் காலி பகுதியில் வைத்துமே கைதுசெய்யப்பட்டனர் என்று, குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.  

பணம் திருடப்படுவது குறித்து, தனியார் வங்கிகள், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, மேற்படி இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  

இவ்விருவரும், மாத்தறை, மிரிஸ்ஸ, அம்லந்தொட்ட, பிலியந்தல, கதிர்காமம் ஆகிய பிரதேசங்களுக்குச் செல்லும் வழியிலேயே, இவ்வாறு ஏ.டி.எம் அட்டைகளைப் பயன்படுத்தி பணத்தை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .