Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஜூன் 14 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமய வழிபாட்டிடங்கள், கடைகள், வர்த்தக நிலையங்கள், வீடுகள் ஆகியவற்றை இலக்குவைத்து, அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் குறித்து, அமைச்சரவை கரிசனை கொண்டிருப்பதாக, அமைச்சரவையால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையொன்று தெரிவித்தது. இந்தச் செயற்பாடுகளைக் கண்டிப்பதாகவும், அந்த அறிக்கை தெரிவித்தது.
இந்தச் சம்பவங்களால் ஏற்பட்ட சொத்துகளின் அழிவு, வாழ்வாத இழப்பு ஆகியவற்றுக்காகவும் மனதில் ஏற்பட்ட வலிகளுக்காகவும் தனிநபர்களுக்கு ஏற்பட்ட அச்சத்துக்காகவும், தாங்கள் வருந்துவதாகவும், அந்த அறிக்கை தெரிவித்தது.
"தவறான எண்ணங்களைக் கொண்ட தனிநபர்களினதும் குழுக்களதும் வெறுப்பு நிரம்பிய வெளிப்பாடுகளும் நடவடிக்கைகளும், வேறான இன, மதப் பின்னணிகளைக் கொண்ட சக பிரஜைகளுக்கு மன வருத்தத்தையும் இழித்துரைப்பையும் வன்முறையைத் தூண்டுவதாகவும் அமையும் நிலையில், இலங்கைச் சமூகத்தில், அவற்றுக்கு இடமேதும் கிடையாது என்பதை, நாம் உறுதிப்படுத்துகிறோம்" என்று, அதில் மேலும் குறிப்பிடப்பட்டது.
தொடர்ந்து அந்த அறிக்கையில், நல்லிணக்கம், சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், இணக்கமான சகவாழ்வு, சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்பை நாங்கள் மீள வலியுறுத்தும் அதே நேரத்தில், எந்த மத, இனக் குழுமங்கள் மீதும் இலக்குவைக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் வன்முறை, வெறுப்புப் பேச்சு ஆகியவற்றுக்கு எதிராக, நாட்டின் சட்டத்துக்கு ஏற்ப, தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுக்குமாறு, சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு நாம் பணிக்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, சட்ட விலக்களிப்பு என்பது, நாடு மீண்டும் முரண்பாட்டுக்குள் செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதன் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்டுள்ள மோசமான செயற்பாடுகளை மேற்கொண்டவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு, சட்ட அமுலாக்க அதிகாரிகள், சட்டமா அதிபர் ஆகியோரைப் பணிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் ஆங்கில, சிங்கள வடிவங்கள், எந்தவொரு சமூகத்தையும் குறிப்பிடாது, பொதுவானதாதகவே இந்தக் கருத்துகளைக் கொண்டிருந்தன. அண்மைக்காலமாக, முஸ்லிம் மக்களின் வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் வர்த்தக நிலையங்களுமே பாதிக்கப்படும் நிலையிலும், முஸ்லிம்களின் பிரச்சினைகளை நேரடியாகக் குறிப்பிடாதே, இந்த அறிக்கை அமைந்தது. ஆனால் இதன் தமிழ் வடிவத்தில், முஸ்லிம், இஸ்லாம் ஆகியன குறிப்பிடப்பட்டிருந்தன என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
2 hours ago
7 hours ago
15 Sep 2025
15 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
15 Sep 2025
15 Sep 2025