2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

'அதிகார பகிர்வு தொடர்பில் கோட்டா வாயே திறக்கவில்லை’

Editorial   / 2019 நவம்பர் 13 , பி.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரனமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் அதிகாரப்பகிர்வுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என, தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அதனை நிறைவேற்றுவார் என, எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாபெரும் பிரசாரக் கூட்டம் இன்று (13) பிற்பகல் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமானது.

இந்த கூட்டத்தில் உரையாற்றியபோது, இதனை தெரிவித்த இரா.சம்பந்தன், அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ‘மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தபோதும் அதற்கு முன்னரும் யுத்தம் உக்கிரமடைந்திருந்த காலக்கட்டத்தில் அதியுட்ச அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்று  வலியுறுத்தப்பட்டது. அதிகார பகிர்வு விடயங்கள் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் முன்னெடுக்கப்படமாட்டாது.

“அரசியல் தீர்வு தொடர்பில் அவரது விஞ்ஞாபனத்தில் எதையம் கூறவில்லை. அரசியல் தீர்வு தொடர்பில் எவ்வளவு விடங்கள் இடம்பெற்றுள்ளன. அப்படி இருந்தும் கோட்டாவின் விஞ்ஞாபகத்தில் அரசியில் தீர்வு தொடர்பில் ஒரு வாரத்தை கூட இல்லை.

“நாட்டுக்கு ஒரு புதிய அரசியலமைப்பு வேண்டும் என்றும், அதியுட்ச அதிகார பகிர்வுடனான ஒரு தீர்வு வழங்குவேன் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் கூறியுள்ளார். அவரது விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் நிறைவேற்றப்படும். நிறைவேற்றப்படவேண்டும்.  ஒரு நியாயமான நிதானமான அரசியல் தீர்வு, ஒருமித்த நாட்டுக்குள், பிரிக்கப்படாத  நாட்டுக்குள் அதியுட்ச அதிகாரப்பகிர்வின் மூலமான தீர்வு வேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .