2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்

Editorial   / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தொடர்ச்சியான பெய்த கடும் மழையால் அத்தனகல ஓயாவின் நீர்மட்டம் பெருக்கெடுக்கும் அளவுக்கு உயர்வடைந்துள்ளது.

இது தொடர்பில் கங்கையை அண்மித்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு, ஜா - எல், மினுவாங்கொடை, கம்பஹா ஆகிய பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கம்பஹா - ஜா-எல வீதி மற்றும் கம்பஹா - மினுவாங்கொடை வீதி ஆகியவற்றின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .