2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

அநுராதபுரத்தில் சட்டவிரோத ஆயுத தயாரிப்பு நிலையம் முற்றுகை

Super User   / 2010 ஜூன் 25 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரத்திலுள்ள மெகொடாட்வவே எனும் பகுதியில் சட்டவிரோதமான முறையில் ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த நிலையமொன்றை கொழும்பு தலைமைப் பிரிவுப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில், அங்கு தயாரிக்கப்பட்ட ஒரு தொகை துப்பாக்கிகள் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

இதனையடுத்து, சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .