2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

அநுராதபுரம் கைதி வெலிக்கடைக்கு மாற்றம்

ரொமேஷ் மதுஷங்க   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களென சந்தேகிக்கப்படும், உண்ணாவிரதமிருக்கும் கைதிகள் எட்டுப்பேரில் ஒருவர், வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிவசுப்ரமணியம் தில்லைராஜா என்ற கைதியே, நேற்று முன்தினம் மாலை, வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இன்றைக்கு எட்டு வருடங்களுக்கு மேலாக, அநுராதபுரம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அந்தக் கைதி, நீரிழிவு நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளார் என்றும் சிறைச்சாலை வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இதேவேளை, ஜெனீவாவில் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் போ​து, இந்தக் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிப்பது வழமையாகுமென, அநுராதபுரம் சிறைச்சாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X