2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

அனைத்து மாவட்டங்களிலும் அரச வைத்தியசாலை

Editorial   / 2020 ஜனவரி 12 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அரச வைத்தியசாலைகளை நிறுவுவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

கொழும்பு, கராப்பிட்டிய மற்றும் கண்டி உள்ளிட்ட வைத்தியசாலைகளில் நிலவும் நெரிசலைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், மக்கள் தாம் வசிக்கும் மாவட்டங்களிலேயே தேவையான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மத்திய அரசின் வைத்தியசாலைகள் இதுவரை நிர்மாணிக்கப்படவில்லை.

இதனால் அந்த மாவட்டத்துக்கு உரித்தான பிரதேச வைத்தியசாலைகளிலேயே மக்கள் சிகிச்சைகளை பெற்று வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--