2021 மே 08, சனிக்கிழமை

அனோமாவுக்கு உள் சூழ்ச்சி

Kogilavani   / 2017 ஜூன் 02 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராஜாங்க அமைச்சர்கள் நால்வர் மற்றும் பிரதியமைச்சர்கள் நால்வருக்குப் புதிதாக நியமனம் வழங்கப்பட்ட வைபவத்துக்குச் சென்றிருந்த பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி பிரதியமைச்சர் அனோமா கமகே, வெறுங்கையோடு திரும்பியிருந்தமை யாவரும் அறிந்த விடயமாகும்.  

அவருடன் சென்றிருந்த ஏனையோருக்கு, புதிய பதவிகள் வழங்கப்பட்டிருந்தன. பிரதியமைச்சர் அனோமாவுக்கு,  மேலதிகமாக ஒரு பிரதியமைச்சர் பதவி அல்லது இராஜாங்க அமைச்சர் பதவி வழங்குவதற்கே முன்னர் ஏற்பாடாகியிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தன.  

அதன் பிரகாரமே, ஜனாதிபதி செயலகத்துக்கு கடந்த புதன்கிழமை் அவரும் அழைக்கப்பட்டிருந்தார். எனினும், அன்றையதினம் அவருக்கு எவ்விதமான பதவியும் வழங்கப்படவில்லை.  அவருக்கும் பதவியொன்று வழங்குவதற்கு ஏற்பாடாகியிருந்தது என்றும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பிரபல்யமான அமைச்சரொருவரின் செயற்பாட்டின் காரணமாகவே, பிரதியமைச்சர் அனோமா கமகேவுக்கு, மற்றுமொரு அமைச்சுப் பதவியோ அல்லது இராஜாங்க அமைச்சர் பதவியோ வழங்கப்படவில்லை என்று தகவல் கசிந்துள்ளது. 

“அமைச்சரவை மாற்றத்தின் போது, மாற்றப்பட்ட அமைச்சர் ஒருவரே, பிரதியமைச்சர் அனோமா கமகேவுக்கு, புதிய பதவியை வழங்கவேண்டாம் என்று ஜனாதிபதியிடம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X