Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 15 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
அனர்த்தங்கள் தொடர்பில் கிழக்கு மாகாண மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையென, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம இன்று (15) தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் இன்றைய தினம் வெப்ப நிலை அதிகரிப்புக் காணப்படுவதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ள நிலையில், திருகோணமலையில் வெளியில் நேற்றைய தினம் தான் இருக்கும் போதே அதன் உஷ்ணத்தை உணர்ந்து கொண்டேன் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.
இதேவேளை, திருகோணமலையில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பில், கிழக்கு ஆளுநரின் ஊடகச் செயலாளர், ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு சென்றதையடுத்து, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், பொலிஸாருக்கும் மக்களுடைய பாதுகாப்புத் தொடர்பில் உடன் கவனம் செலுத்துமாறு, ஆளுநரால் கட்டளை இடப்பட்டிருந்தது.
எனினும், எவ்விதப் பாதிப்புகளும் ஏற்படவில்லை. இது தொடர்பில் உரிய திணைக்களத் தலைவர்களுடன் மக்களின் பாதுகாப்புத் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கிழக்கு ஆளுனரின் ஊடகச் செயலாளர் ஹஸன் அலால்தீன் தெரிவித்தார்.
அனர்த்தங்கள் தொடர்பான உரிய அமைச்சின் திணைக்களத்துடன் மக்களின் பாதுகாப்பு விடயம் தொடர்பில் பேசப்பட்டதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
கிழக்கில் அதிக வெப்ப நிலை காரணமாக மக்கள் அவதானத்துடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு, ஆளுநர், பொதுமக்களைக் கேட்டுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார்.
47 minute ago
3 hours ago
8 hours ago
15 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
3 hours ago
8 hours ago
15 Sep 2025