2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

அனர்த்தத்தால் போக்குவரத்துக்குத் தடை

Editorial   / 2017 மே 29 , மு.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக, பெரும்பாலான வீதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. இதனால், பொதுமக்களின் போக்குவரத்துக்குப் பாரிய தடை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, தடை  ஏற்பட்டுள்ள போக்குவரத்து வீதிகள் தொடர்பில், பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்தினபுரி - கலவான, பாணந்துறை, பலாவெல வீதிகள், குருவிட்ட - பாத்தகம - கதன்கொட ஊடாக கொரக்கஎல வீதி, கலவான - பொத்துபிட்டிய, மத்துகம வீதிகள், எஹெலியகொட - எல்லாவல வீதி, பொத்துபிட்டிய - இறக்குவானை வீதி, அயகம - கவரகிரிய வீதி, இரத்தினபுரி - வேவெல்வத்த வீதி போன்றன, வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.

கொலன்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலன்ன - தெனியாய வீதி, நிவித்திகல - கலவான வீதி, கிரிஎல்ல - பாணந்துறை வீதி போன்றன, வெள்ளநீரால் மூழ்கியுள்ளன.

நுகேகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லேரியா - சந்திரிகா குமாரதுங்க மாவத்தையின் பழைய வீதி, புளத்கமுவ வீதியின் கொட்டுவேகொட பிரதேசம், பாதுக்க - ஹங்வெல்ல வீதி, பாதுக்க பழைய வீதி, பாதுக்க - இங்கிரிய வீதி, ஹங்வெல்ல, களுஅக்கல - லபுகம வீதி, பஹத்கம - தித்தெணிய வீதி, 698 கடுவெல - ஹோமாகம வீதி, 697 கோஹாகம - கடுவெல வீதி போன்றன, வெள்ளத்தால் மூழ்கிய நிலையில், போக்குவரத்துக்குத் தடையேற்படுத்தியுள்ளன.

காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெலுவ - தெல்லவ வீதி, நெலுவ - உடுகம வீதி, நெலுவ - பெலவத்த விதி, உடுகம கிழக்கு கெட்டகொட, கல்லந்தல, எப்பல, பனன்கல, உடுகம பொலிஸ் நிலையத்துக்கு திரும்பும் சந்தி, உடுகம - நெலுவ வீதி, உடுகம - பத்தேகம வீதி, வந்துரம்ப - மாப்பலகம வீதி, வந்துரம்ப - யக்கமுல்ல வீதி, வந்துரம்ப - பத்தேகம வீதி, போத்தல - பத்தேகம வீதி, வக்வெல்ல - கிங்தோட்ட வீதி, வக்வெல்ல, பஹால கிஹிபிய, ஹினிதும, அக்குரஸ்ஸ வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

களனி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வான நகர், பியகம, பண்டாரவத்த, பட்டிவெல சந்தி போன்றனவும் மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்குரஸ்ஸ, அம்லகொட சந்தி, பரதுவ வேல்ல, கம்புருபிட்டிய வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.

களுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெத்ஹேன, ரஹ்கஹல, பன்வில, பதுரளிய, அத்வெலிதொட்ட, புளத்சிங்கள, பரகொட, கல்கெட்டிய, மோல்காவ, மேல் வெல்கம, யட்டிகம்பிட்டிய, களவெல்லாவ, தெபுவன, தியகடுவ, நாகஹாதொல போன்ற வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

அத்துடன், களுத்துறையின் தொடங்கொட, வெல்லத்த, களதோறுவநேஹின்ன, மிரிஸ்வத்த, மத்துகம, அளுத்கம, கொஹிலவத்த, எத்தனமடல, ஹொரண, பனாபிட்டிய, கல்பாத்த, தெபுவன, நேபட, வரக்காகொட போன்ற வீதிகள், வெள்ளத்தால் நிரம்பியுள்ளன.

தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரகெட்டிய, தங்கெட்டிய, வேல்ல போன்ற பிரதேசங்களும், வெள்ளத்தால் நிரம்பியுள்ளதால், போக்குவரத்துக்குத் தடை ஏற்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .