ரஸீன் ரஸ்மின் / 2017 ஜூலை 13 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் தள வைத்தியசாலைக்கு வருகை தர இருந்த சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவின் விஜம், அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, புத்தளம் தள வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் என்.நகுலநாதன், இன்று (13) தெரிவித்தார்.
புத்தளம் தள வைத்தியசாலை மற்றும் கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலைகளின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சுகாதார அமைச்சர், எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை புத்தளம் தள வைத்தியசாலைக்கு விஜயம் செய்யவிருந்தார்.
இந்த நிலையிலேயே, தவிர்க்க முடியாத காரணங்களால் அடுத்த மாதம் 7ஆம் திகதிக்கு அமைச்சரின் புத்தளம் விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி ஆகியோர் அண்மையில் சுகாதார அமைச்சரைச் சந்தித்து , புத்தளம் தள வைத்தியசாலைக்கு நேரில் விஜயம் செய்யுமாறு விடுத்த வேண்டுகோளுக்கமைய சுகாதார அமைச்சர் புத்தளத்துக்கு விஜயம் செய்யவிருத்தமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
23 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
23 Jan 2026