2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

அமிதாப்,ஐஷ்வர்யா ராய்,ஷாருக்கான் ஆகியோருக்கு முத்திரைகள் வெளியிட இலங்கை அரசு ஏற்பாடு

Super User   / 2010 மே 06 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு வருகைதரவுள்ள இந்தித்திரைப்பட நட்சத்திரங்களான அமிதாப் பச்சன்,ஷாருக்கான்,ஐஷ்வர்யா ராய் ஆகியோருக்கு இலங்கை அரசாங்கம் முத்திரைகளை வெளியிடவுள்ளதாக இந்தியத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் ஜூன் மாதம் கொழும்பில் சர்வதேச இந்தியத்திரைப்பட விழாவை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது.

இவ்விழாவின்போதே முதல் நாள் உறைகளை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இவ்வாறு முத்திரைகள் வெளியிடப்படுமானால்,இந்திய நடிக,நடிகையர்களுக்கு முத்திரைகள் வெளியிடப்படுவது இதுவே முதல் தடவையாகும் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,இந்தியக்கலைஞர்களின் இலங்கை விஜயத்துக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் மேலும் உக்கிரமமடைந்துள்ளது.

இதன் காரணமாக,அமிதாப் பச்சன் உட்பட ஏனைய கலைஞர்கள் இலங்கைக்கு வருகை தருவது இன்னும் கேள்விக்குரியதாகவே காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • KONESWARANSARO Friday, 07 May 2010 02:36 PM

    அமிதாப் கோஷ்டி இலங்கை வந்தால், இந்தியத் தமிழர்கள் துரோகி முத்திரை குத்தி விடுவார்களே.. எந்த முத்திரை என்று அவர்களே தீர்மானிக்கட்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--