2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

அம்பாறை மாவட்ட சுதந்திர கட்சி அமைப்பாளர் பதவி நியமனத்தில் குழப்பம்?

Super User   / 2010 ஜூன் 25 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆளும் ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளவர்  யார் என்பதில் கிழக்கு மாகாண கட்சி் உறுப்பினர்களிடையே இழுபறி நிலை காணப்படுவதாக தமிழ்மிரர் இணையதளத்திற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.எம். நெளசாத்துடன் தொடர்பு கொண்டது.

ஸ்ரீலங்கா சுகந்திர கட்சி அம்பாறை மாவட்ட அமைப்பாளராக இதுவரை யாரையும் நியமிக்கவில்லை என்றார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.நெளசாத்

மேலும், கட்சியின் உயர் மட்டத்திலிருந்து எவருக்கும் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் என நியமன கடிதம் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் சம்மாந்துறை தொகுதி முன்னாள் அமைப்பாளர் அன்வர் சியாத்துடன் தமிழ்மிரர் இணையதளம் வினவியது.

ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளராக செயற்பட்ட தன்னை நாடளுமன்ற உறுப்பினர் சரத் விரசேகரவின் பரிந்துரைக்கமைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ  அம்பாறை மாவட்ட அமைப்பாளராக நியமித்துள்ளார் என்று  அன்வர் சியாத் தெரிவித்தார்.

மேலும், மாவட்ட அமைப்பாளராக தன்னை நியமித்தமைக்கு ஆதாரமாக நியமன கடிதம் வழங்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளராக செயற்பட்ட தனக்கு பதவி உயர்வாகவே இப்பதவி ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.(R.A)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--