2025 ஜூலை 16, புதன்கிழமை

அமெரிக்க அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்கு இணங்க நல்லிணக்க ஆணைக்குழு

Super User   / 2010 ஜூன் 01 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவானது அமெரிக்க அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகளுக்கு அமையவே இருப்பதாக  இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஊடகவியலார்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இதனைக் கூறினார்.

இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்றிருந்த நெருக்கடியான நிலைமைகளை ஆராய்வதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ள மஹிந்த ராஜபக்ஸ, மேற்படி நல்லிணக்க ஆணைக்குழுவில் 8 அங்கத்தவர்களையும் நியமித்துள்ளார்.

மேற்படி நல்லிணக்க ஆணைக்குழுவானது கடந்த 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 2009ஆம் ஆண்டு மே மாதம் வரை இடம்பெற்றிருந்த நெருக்கடியான நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

 

You May Also Like

  Comments - 0

  • soosai ferandao Wednesday, 02 June 2010 12:21 AM

    இந்த விவகாரத்தில் இலங்கை எப்படி இயங்கும் என்பது உலகறிந்த விடையம்.பேய்களின் ஆட்சியில் சாத்திரங்கள்
    பிணம் தின்னும்.

    வகை தொகை இன்றி நம் மக்களை கொலை செய்தவர்களே இப்பொழுது விசாரணை செய்யும் வேடிக்கையை என்னவென்று சொல்லுவது.

    சனநாயகம் என்றபேரில் பெரும்பான்மை சர்வாதிகாரம். என்ன செய்யலாம் நமக்கு நாமே ஆறுதல் சொல்வோம். இது ஒன்றும் முடிவல்ல.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .