Kanagaraj / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சரவை அந்தஸ்துள்ள மூன்று அமைச்சுக்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்கள் மூவரும், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. அபேகோனிடமிருந்து தங்களுக்கான நியமனக்கடிதங்களை இன்று திங்கட்கிழமை பெற்றுக்கொண்டனர்.
ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்தே, அவர்களுக்கான நியமனக்கடிதங்கள் கையளிக்கப்பட்டன.
வெளிவிவகார, பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ மற்றும் தபால் சேவைகள் ஆகிய மூன்று அமைச்சுகளுக்கே புதிதாக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக எசல வீரகோன் நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின், இராஜதந்திர சேவையில் உள்ள சிரேஷ்ட அதிகாரியான எசல வீரகோன், 1988இல் வெளிவிவகார சேவையில் இணைந்துகொண்டதுடன், அவர் பல நாடுகளில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் புதிய செயலாளராக ஜே.ஜே.ரத்னசிறி நியமிக்கப்பட்டுள்ளார். தபால் சேவைகள் அமைச்சின் புதிய செயலாளராக டீ.ஜீ.எம்.வீ. ஹப்பு ஆராய்ச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்ட புதிய செயலாளர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சுமூகமான ஒரு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago