2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

அருங்காட்சியக வழக்கு மீண்டும் விசாரணைக்கு

Editorial   / 2020 ஜனவரி 09 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியக நிர்மாணத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பான வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் 6 பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல சட்ட மா அதிபர் தீர்மானித்துள்ளதாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மேல் மாகாண மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று (08) அறிவித்தார்.

சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 10 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--