2021 மார்ச் 03, புதன்கிழமை

’அரசாங்க வைத்தியர்களுக்குத் தட்டுப்பாடு வரும்’

Editorial   / 2017 ஜூலை 22 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மருத்துவத்துறையில், தற்போது காணப்படும் பிரச்சினையின் காரணமாக, இனிவரும் வருடங்களில், இலங்கையில், அரசாங்க வைத்தியர்களுக்குத் தட்டுப்பாடு நிலவும் நிலைமை ஏற்படும் என்று, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளார்.

மருத்துவத்துறையில், தற்போது கல்விகற்று வரும் மாணவர்கள், பல்வேறு அழுத்தங்கள் முங்கொடுத்தும், பல கோரிக்கைகளையும் முன்வைத்தும் வருகின்ற நிலையில், மருத்துவக் கல்வி பாதிப்படைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

“மருத்துவக் கல்வியை தொடர்ந்து வரும் மாணவர்களுக்கு, இறுதி பரீட்சையை எழுதுவதற்கு, மருத்துவப் பயிற்சி அவசியமாகின்றது. எனினும், தற்போதுள்ள நிலைமையைப் பார்த்தால், எந்தவொரு மாணவரையும், அவ்வாறு பயிற்சிகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்ப வைக்க முடியாது என்பதனால், அவர்கள், இறுதிப் பரீட்சையையும் எழுதுவது சாத்தியமற்றதாகக் காணப்படுகின்றது” என்று அவர் கூறியுள்ளார்.

எனவே, மருத்துவ மாணவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கானத் தீர்மானத்தை, ஜனாதிபதியே எடுக்க முன்வரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .