2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

‘அரசியலுக்கு வரமாட்டேன்’

Kogilavani   / 2017 மே 31 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான், எதிர்காலத்தில் இடம்பெறும் தேர்தல்களில் குதிக்க மாட்டேன் என்றும், அரசியலுக்கு வரும் நோக்கம் தனக்கு இல்லையென்றும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.   

அளுத்கடை நீதிமன்ற கட்டடத்துக்கு முன்பாக வைத்து, ஊடகவியலாளர்கள் நேற்றுமுன்தினம் (29) கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.   

முன்னதாகக் கேள்வி கேட்ட ஊடகவியலாளர், “இரட்டை பிரஜாவுரிமையை இல்லாமற் செய்து கொள்வீர்களா?” என வினவினார். அதற்கு பதிலளித்த அவர், “தேர்தலில் போட்டியிடும் எண்ணம் என்னிடம் இல்லை என்பதனால், இரட்டை பிரஜாவுரிமை, எனக்குப் பிரச்சினை இல்லை” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X