2021 மே 06, வியாழக்கிழமை

அருட்தந்தை பிரான்சிஸ், எங்கே?

Editorial   / 2018 மார்ச் 19 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன் , எம்.றொசாந்த் 

இறுதி யுத்தத்தின்போது, சரணடைந்து காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ், அவருடன் சரணடைந்து காணாமலாக்கப்பட்ட பொதுமக்கள் தொடர்பான தகவல்களை அறியத்தருமாறு கோரி, புனித யாழ்.பத்திரிசியார் கல்லூரிக்கு அண்மையாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (19) யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புனித யாழ்.பத்திரிசியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை திறந்து வைப்பதுக்காக பாடசாலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும்பொருட்டு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ், புனித யாழ்.பத்திரிசியார் கல்லூரியின் முன்னாள் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .