2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

அரநாயக்கவில் அனர்த்தம்: 15 பேர் காயம்

Kanagaraj   / 2016 மே 24 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரநாயக்கவில், இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மற்றுமொரு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அரநாயக்க - மாவனெல்ல பிரதான வீதியில் பொல் அம்பேகொட பிரதேசத்தில், தனியார் பஸ்கள் இரண்டு, ஒன்றோடு ஒன்று மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால், இரண்டு பஸ்களின் சாரதிகள் உட்பட பயணிகள் 15 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் திப்பிட்டிய அரநாயக்க மாவட்ட வைத்தியசாலை மற்றும் மாவனெல்ல ஆதர வைத்தியசாலை ஆகிய இரு வைத்தியசாலைகளிலும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தின் காரணமாக, எலஹபிடிய சாமசர மலையில் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தப்பிரதேசத்தில் வானங்களை செலுத்தும் போது, கூடுதல் அவதானத்தை செலுத்துமாறும் பொலிஸார், சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X