2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

அரநாயக்கவில் 116 சடலங்களைத் தேட முடியவில்லை

Kanagaraj   / 2016 மே 31 , மு.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரநாயக்க, சாமசர மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததையடுத்து, அதனுள் சிக்குண்டு பலியானவர்களைத் தேடும் நடவடிக்கைகள், இரண்டு வாரங்களுக்குப் பின்னர், நேற்றுத் திங்கட்கிழமையுடன் நிறுத்தப்பட்டதாக, மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இராணுவமும் பிரதேச செயலாளர் காரியாலயமும் அறிவித்துள்ளது.

அப்பகுதியில் நிலவுகின்ற மோசமான வானிலையினால், தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், காணாமல் போன 116 பேரின் சடலங்களை மீட்கமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மண்ணில் புதையுண்டு மீட்கப்படாமல், மரணித்தவர்களுக்கான இறுதிக்கிரியைகள், 2ஆம் திகதி வியாழக்கிழமையன்று, அங்கு இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மண்சரிவில் சிக்குண்டவர்களில் 27 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. சடலங்களின் பாகங்கள் 21 மீட்கப்பட்டன. அதில், 11 சடலங்கள், பாடசாலை மாணவர்களுடையது. கடந்த 17ஆம் திகதியன்று இடம்பெற்ற மண்சரிவில், ஆகக்குறைந்தது 25 மாணவர்கள், மண்ணில் புதையுண்டு மரணித்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .