Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Gavitha / 2016 மார்ச் 30 , மு.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீதிமன்றத்துக்குள் வைத்து தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும், வலல்லாவிட்ட பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அத்துகோரலகே தொன் உதேனி பிரியங்கவை, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, நேற்று செவ்வாய்க்கிழமை (29) எச்சரித்தார்.
வலல்லாவிட்ட பிரதேச சபைக்கு உரித்துடைய வீதிகளில், பாரம் கூடிய வாகனங்கள் பயணிப்பதற்கான அனுமதியை வழங்குவதற்காக, 5 இலட்சம் ரூபாயை இலஞ்சமாகக் கோரினார் என்ற குற்றஞ்சாட்டப்பட்ட வழக்குக்காக முன்னாள் தலைவர், நீதிமன்றத்துக்கு சமூகமளித்திருந்தார்.
நீதிமன்றச் செயற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்த போது, அவர், அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்துள்ளார். இதனை அவதானித்த பிரதான நீதவான், அவரை எச்சரித்தார்.
எனினும், தான் அழைப்பை எடுக்கவில்லை என்றும், தன்னுடைய அலைபேசிக்கு வந்த அழைப்புக்கே பதிலளித்ததாக கூறினார்.
இவைதொடர்பில், சந்தேகநபரின் அலைபேசியைப் பரிசீலனைக்கு உட்படுத்தி, அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு நீதவான், பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.
சந்தேகநபர் கூறுவது பொய்யாக இருப்பின், அவருக்கு எதிரான இலஞ்ச வழக்கில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை இரத்துச் செய்யுமாறும் பிரதான நீதவான் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago