2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

அ.புரத்தில் தற்கொலை குண்டுதாரி; போலி எஸ்.எம்.எஸ் அனுப்பிய நபரொருவர் கைது

Super User   / 2010 ஜூலை 01 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்கொலை குண்டுதாரிகள் 12பேர் அநுராதபுரத்தில் நடமாடுவதாக தனது மனைவியை பயமுறுத்துவதற்காக அவருக்கு போலியான எஸ்.எம்.எஸ் குறுந்தகவல் அனுப்பிய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொசன் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு மத அனுஷ்டானங்களுக்காக மதவாச்சியிலிருந்து அநுராதபுரத்துக்கு தனது மனைவி பயணித்திருந்த நிலையிலேயே குறித்த நபர் மேற்படி எஸ்.எம்.எஸினை அனுப்பியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த நபர் உட்பட ஆறு பேரைக் கைது செய்து தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைத்துள்ள பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடையதான மேலும் நால்வருக்கு வலைவிரித்துள்ளனர்.      

  Comments - 0

 • xlntgson Saturday, 03 July 2010 07:58 PM

  எஸ்.எம்.எஸ் என்னும் குறுந்தகவலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதா? அநேகர் குறுந்தகவல்களை நகைச்சுவைக்கு மட்டுமே பயன்படுத்த இயலும் என்று நினைக்கின்றனர், காதலோடு தொடர்பு படுத்தி ஊடகங்கள் கேலி செய்கின்றன. செலவு குறைவு என்று சிலர் அவமதிக்கின்றனர். சேவை வழங்கும் நிறுவனங்களும் விளம்பரங்களை இன்ன நேரம் என்றில்லாமல் அனுப்பி கொச்சைப் படுத்துகின்றன. வேறு உபயோகமில்லாத (spam) செய்திகளும் பலர் குறுந்தகவல்களை புறக்கணிக்கக்காரணியாகிறது. எவ்வாறாயினும் சமீப காலத்திய கண்டுபிடிப்புகளில் குறுந்தகவல் மிக எளியது!

  Reply : 0       0

  sheen Monday, 05 July 2010 10:08 PM

  எளிமை என்பது மட்டுமல்ல தெளிவும் கூட. துணிவில்லாதவர்கள் எழுத்து பிடிமானம் கொடுத்துவிடுவோமோ என்று பயப்படத் தேவை இல்லை. இப்போது நிலைமைகள் மாற்றம் என்று குறிப்பிட்டு முன் சொன்னதை மறுக்காதிருக்கலாம் தொலைபேசியில் பேசி விட்டு, அவ்வாறு தான் பேசவில்லை என்று சொன்ன காலம் போச்சு. குரலையும் பதிவுசெய்து தடுத்து வைத்துக்கொள்ள இயலும். எது எப்படி ஆனாலும் தெரியாது என்று குறுந்தகவல் அனுப்பாமல் இருப்பதை விட அனுப்புதல் விவேகம் ஆங்கிலத்தில் அனுப்பினாலும் குறுந்தகவலுக்கு இலக்கணம் அவசியமில்லைஎன்பதை அறிந்து கவலைப்படாமல் அனுப்பலாம்.

  Reply : 0       0

  sheen Monday, 05 July 2010 10:21 PM

  தமிழ், சிங்கள குறுந்தகவல்களை ஆங்கில தட்டச்சு செய்ய வேண்டியதில்லை. எண்களுக்கு பதிலாகவும் எளிதில் வரிக்க (text) இயலும். யாரும் குறுந்தகவல் அனுப்பினால் பதில் அனுப்புங்கள் கௌரமாக, நட்பும் வளரும் இரகசியமும் காப்பற்றப்படுகிறதா என்று கட்டம் கட்டமாக அறிந்து கொள்ளலாம்.
  நட்புக்கு ஒரு நண்பன் குறுந்தகவல். முதுமையை இளைமை வெல்லும். இளமையில் கல் என்ற பழமொழிக்கேற்ப தனிமையையும் வெல்ல இயலும்! செய்து பாருங்களேன். வங்கி அல்லது கடன் அட்டை விபரங்களை மட்டும் கொடுத்து விடாதீர்கள்! பொதுஇடங்களில் சந்தித்தாலும்தனிமையில் வேண்டாம் ஒரு போதும்!

  Reply : 0       0

  srikant Tuesday, 06 July 2010 08:49 PM

  அழைப்புகளாக இருந்தாலும் குறுந்தகவலாக இருந்தாலும் துஷ்பிரயோகம் செய்கிறவர்கள் செய்யவே செய்வார்கள்.
  தகவல் வளர்ச்சியைப் பயன்படுத்திக்கொள்ள எல்லா வசதிகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், குறுந்தகவல் மட்டும் போதாது.
  தபால்அட்டையில் சொல்வதை குறுந்தகவலில் சொல்வதால் தபால்துறைக்கு நஷ்டம். காதில் சொல்லும் விடயங்களை எஸ்.எம்.எஸ்.இல் சொல்லலாம். கேட்கவில்லை என்று கூறுவதை போலல்ல, வேறு யாரிடமும் கேட்காமல் அதே நபரிடம் நேரில் கேட்க வேண்டும். யாருக்கும் கேட்காமல் பேச தொலைபேசியில் முணுமுணுக்கிறவர்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .