2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

ஆசியக்கிண்ண இறுதிப்போட்டியில் முத்தையா முரளிதரன் விளையாடுவாரா?

Super User   / 2010 ஜூன் 23 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் நாளை நடைபெறவுள்ள ஆசியா கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் தான் விளையாட வேண்டும் என முத்தையா முரளிதரன் இலங்கை கிரிக்கட்  தெரிவுக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தன.

சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் கோரிக்கையை அடுத்து இவருக்கும்  இலங்கை கிரிக்கட்  தெரிவுக்குழு  உறுப்பினர்களுக்கும் இடையில் தற்போது இரண்டாவது தடவையாக பேச்சுவார்த்தை  பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இன்று மாலை இடம்பெற்ற முதலாவது பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.

நாளைய போட்டியில் தான் விளையாடாத பட்சத்தில் கிரிக்கட் போட்டிகளில் இருந்து முத்தையா முரளிதரன் ஒய்வு பெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--