2021 மே 18, செவ்வாய்க்கிழமை

ஆழமாக ஆராய்ந்ததன் பின்னரே முடிவெடுத்தோம்: செயலாளர்

Kanagaraj   / 2015 நவம்பர் 23 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைப்புகள் மற்றும் நபர்கள் தொடர்பில் ஆழமாக ஆராய்ந்ததன் பின்னரே அதில் சில அமைப்புகள் மற்றும் நபர்கள் மீதான தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தோம்' என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

 அவ்வமைப்பின் மற்றும் நபர்களின் கடந்தகால மற்றும் நிகழ்கால செயற்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, அரச புலனாய்வு நிறுவனம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அமைச்சு விடுத்திருந்த அறிக்கையை ஆழமாக ஆராய்ந்தே, தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

நன்றாகத் தேடியறிந்ததன் பின்னரே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. தடை நீக்கப்பட்ட அமைப்புகள் சிலவும் நபர்கள் சிலரும்இ எந்தவொரு பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களோ, கைதேர்ந்தவர்களோ அல்லர். அவ்வாறானவர்கள் மீதும் அவ்வமைப்புகள் மீதும் தொடர்ந்து தடையை விதித்து அந்த தடைப்பட்டியலில் வைத்திருப்பது அர்த்தமற்றதாகும் என்றும் அவர் தெரிவித்தார். தடைசெய்யப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புகளின் செயற்பாடுகள் தொடர்பில் இன்னும் ஆராயவேண்டியிருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

நான் நினைக்கின்றேன்இ நாங்கள் பல்வேறு பக்கங்களிலிருந்தும் நல்லிணக்கத்தை ஆரம்பித்துள்ளோம். பாதுகாப்புப் பிரிவினர் வசமிருந்த இடங்களை உரியவரிடம் கையளிப்பதற்கு, ஒரு பக்கத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.  யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாகாண பொருளாதாரம் அபிவிருத்தி செய்யப்பட்டு, அந்த மாகாணத்தில் வாழ்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதுடன்இ நாங்கள் முன்னோக்கி நகரவேண்டியுள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டார்.

தடை நீக்கப்பட்டுள்ள அமைப்புகள் மற்றும் நபர்கள் இலங்கையில் செயற்படுவதற்குச் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது என்றும் அவர்கள் சட்டத்தை மீறாத வகையில் செயற்படவேண்டும் என்றும் அதில் அவர்கள் கவனமாக இருக்கவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .