2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

ஆஸ்திரேலியாவுக்கு அரசியல் புகலிடம் கோரி சென்ற 5 இலங்கையர் உயிரிழப்பு

Super User   / 2010 மே 10 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் புகலிடம் கோரி ஆஸ்திரேலியா சென்ற இலங்கையர்களில் ஐந்து பேர் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர்.

அரசியல் புகலிடம் கோரிச் சென்ற இவர்களை ஏற்றிச்சென்ற படகு கடந்த வாரம் காணாமல் போயிருப்பதுடன், இவர்களைப் காப்பாற்றுவதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அரசியல் புகலிடம் கோரி குறித்த படகில் 60 பொதுமக்கள் பயணித்திருப்பதுடன், இவர்களில் 15 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் கடந்த புதன்கிழமை எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து குறித்த படகு காணாமல் போயுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--