2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

இந்தியப் பிரதமரை இன்று சந்திக்கிறார் ஜனாதிபதி

Editorial   / 2019 நவம்பர் 29 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, இன்று (29) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

புதுடில்லியிலுள்ள ஹைதராபாத் மாளிகையில், இந்தச் சந்திப்பு இடம்பெறுள்ளது.

இதன்போது, இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை பலப்படுத்திக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரண்டு நாள்கள் விஜயத்தின் போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கள், இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் ஆகியோரை, இன்றைய தினம் (29), ஜனாதிபதி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

இந்தியப் பிரதமருடனான சந்திப்பின் பின்னர், இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் - இலங்கையின் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .