2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

இந்திய நடிகர் சல்மன் படப்பிடிப்புக்காக நாளை இலங்கை விஜயம்

Super User   / 2010 ஜூன் 21 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய பொலிவுட் நடிகர் சல்மன்கான் நாளை மாலை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர் நடித்து வெளிவரவுள்ள இந்தி மொழித் திரப்படமொன்றுக்கான படப்பிடிப்புக்காகவே அவரது இந்த விஜயம் இடம்பெறுகின்றது என்று உல்லாசப் பயணத்துறை தெரிவித்தது.

தென்னிந்தியாவிலிருந்து வெளியாகும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இலங்கையில் படப்பிடிப்புக்களை மேற்கொள்வதற்கான அனுமதியினை குறித்த திரப்படத்தின் தாயாரிப்புக்குழு வழங்கியுள்ளது.

இலங்கையில் 40 நாட்கள் வரையில் தங்கியிருந்து படப்பிடிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியினை அரசாங்கத்திடமிருந்து சல்மன்கான் பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

"ரெடி" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--