2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் ரணில் விக்கிரமசிங்ஹ கலந்துரையாடல்

Super User   / 2010 மே 12 , மு.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

புதுடில்லியில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது, இலங்கைத் தமிழரின் விடயம்  உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இவர்கள் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

நான்கு நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு ரணில் விக்கிரமசிங்ஹ கடந்த 10ஆம் திகதி இந்தியாவுக்கு புறப்பட்டுச்சென்றுள்ளார்.

யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்வதற்கும், வடபகுதியில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கும் இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை ஏற்கனவே இந்தியா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X