Editorial / 2020 ஜனவரி 15 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனியார் பஸ்களில் பயணிகளை அசௌகரியத்துக்கு உள்ளாகும் வகையில் அதிக சத்தத்துடன் பாடல்கள் மற்றும் காணொளிகளை ஒலி, ஔிபரப்புவது இன்று (15) முதல் தடை செய்யப்பட்டுள்ளது.
அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டால் அது குறித்து 1955 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
முறைப்பாடுகளுக்கு அமைய பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து பஸ் வண்டிகளிலும் ஒலிபரப்புவதற்கு ஏற்ற வகையில் 1000 பாடல்கள் அடங்கிய தொகுப்புகள் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று (15) முதல் குறித்த பாடல்கள் மாத்திரமே பஸ்களில் ஒலிபரப்பப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago