2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

இராஜதந்திர உறவை வலுப்படுத்த நடவடிக்கை

Editorial   / 2020 ஜனவரி 14 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக, வலய மறுசீரமைப்பு தொடர்பிலான ஜப்பானின் இராஜாங்க அமைச்சர் கொசோ யமமொதோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை , ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பாதுகாப்பு, அடிப்படை வசதிகள், கைத்தொழில் மற்றும் வேறு துறைகளில் ஜப்பான் பெற்றுள்ள அனுபவங்கள் மூலம் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும் என ஜப்பானின் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிலவிய 7 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகம், வீழ்ச்சியடைந்துள்ள விதம் தொடர்பில் ஜனாதிபதி ஜப்பானின் இராஜாங்க அமைச்சருக்கு தௌிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன், அதனை கட்டியெழுப்புவதே பிரதான சவால் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--