2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

இரு அமைச்சர்களையும் பதவி விலகுமாறு சி.வி உத்தரவு

Editorial   / 2017 ஜூன் 14 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ள வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் இருவரையும் பதவி விலகுமாறு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், உத்தரவிட்டுள்ளார்.

நாளை (15) மதிய வேளைக்குள், அவ்விருவரம் தாமாக முன்வந்து இராஜினாமாக் கடிதங்களைத் தன்னிடம் கையளிக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வியமைச்சர் த.குருகுலராசா ஆகிய இருவர் மீதும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மீதான விவாதம்,  வடமாகாண சபையின் விசேட அமர்வாக, இன்று (14) இடம்பெற்றது. இதன்போதே, முதலமைச்சர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .