2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

இருவேறு விபத்துக்களில் இருவர் பலி

Niroshini   / 2016 ஜூலை 16 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை மற்றும் மீஹத்தென்ன ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்றிரவு இடம்பெற்ற இரு வேறு விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு-கண்டி பிரதான வீதியின் கேகாலை, கலிகமுவ பகுதியில் நேற்றிரவு 10.40 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் பயணித்த வானொன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இதில், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த நபர்களை கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில், அக்குரணை - வறாகஸ்ஸியன்ன பகுதியைச் சேர்ந்த மொஹமட் அமீர் ஒமர் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மீஹத்தென்ன ஹொரவல-பிடிகல பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மொரகலயிலிருந்து பெலவத்த நோக்கி சிறிய ரக கெப் வாகனமொன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் குறித்த நபர் படுகாயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கல்முல்ல-மீகஹதென்ன பகுதியைச் சேர்ந்த விஜயகுமார(வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .