2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் கொலை இடம்பெற்றதாக ஐ.நா;அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

Super User   / 2010 மே 26 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் சட்டத்திற்கு புறம்பான கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம், கொழும்பு நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டார்.

மேற்படி அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி சேனுகா செனவிரத்னவிடமிருந்து பெற்றுச் சமர்ப்பிக்குமாறும் கொழும்பு நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.

இலங்கையில் சட்டத்திற்கு புறம்பான கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி  பிலிப் அல்ஸ்டன் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பான்கீமூன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
  Comments - 0

  • KONESWARANSARO Thursday, 27 May 2010 03:15 PM

    ஐ.நாவுக்கு என்ன பைத்தியமா? புத்த அரசில் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் எவ்வாறு இடம்பெறும்? அன்பின் உருவங்கள் அல்லவா நாங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--