2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து தமிழகமெங்கும் நாளை ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 ஜூன் 17 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களை உடனடியாக நீக்குமாறு இந்திய அரசை வலியுறுத்தி நாளை தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் தஞ்சை மாவட்டம் - செங்கிப்பட்டி, தஞ்சை நகரம், கடலூர் மாவட்டம் - காட்டுமன்னார்குடி, பெண்ணாடம், சென்னை - சைதாப்பேட்டை,திருத்துறைப்புண்டி, மதுரை - ஜான்சி ராணி பூங்கா, திருச்செந்தூர் -  குறும்பூர் போன்ற பிரதேசங்களிலேயே இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று மேற்படி கட்சி அறிவித்துள்ளதாக தமிழக செய்திகள் மேலும் குறிப்பிடுகின்றன.

  Comments - 0

  • xlntgson Thursday, 17 June 2010 08:42 PM

    இதில் வினோதம் நிறைய இருக்கிறது, இலங்கையில் ஏறத்தாழ பதினைந்து நிறுவனங்கள் தாங்கள் நஷ்டப்பட்டுவிடுவோம் என்று கூறுகின்றன. இந்தியாவில் இதற்கு எதிர்ப்பு? இலங்கைக்கு பெரிதாக இதில் விட்டுக்கொடுப்புகள் இருக்கின்றன.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--