2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

இலங்கை தொடர்பான நிபுணர் குழு அவசியம் இல்லை-கெஹெலிய

Super User   / 2010 ஜூன் 18 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபை இலங்கை விவகாரம் தொடர்பில் ஆராயும் நிபுணர் குழு ஒன்றை நியமிக்க அவசியம் இல்லை என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

மேலும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் நியமிக்கப்பட்டுள்ள நல்லினக்க மறுசீரமைப்பு குழுவே போதுமானது என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையால் இலங்கை விவகாரம் தொடர்பில் ஆராயும் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதை இலங்கை அரசு உறுதியாக எதிர்ப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார செயலாளர் லியென் பெஸ்கோ நேற்று இடம்பெற்ற ஊடகவியளார் மாநாட்டில் தெரிவித்தார்.

எனினும், இக்குழு நியமிக்கப்படும் என லியன் பெஸ்கே குறிப்பிட்டார்.

லியென் பெஸ்கோவின் கருத்து சம்பந்தமாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் வினவிய போது, இது சம்பந்தமாக தெளிவான பதில் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட குழு போதுமானது எனவும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--