2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

இலங்கை - பங்களாதேஷ் இடையே ஒப்பந்தங்கள்; இன்று கைச்சாத்து

Editorial   / 2017 ஜூலை 14 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கான மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும்  பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அம்மையாருக்கும் இடையில், இன்று (14) உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது, இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையே வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளிலுள்ள இருதரப்பு உறவுகளை மேம்படுத்தல் தொடர்பாக, விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.

விவசாயம், கல்வி, வெளிநாட்டலுவல்கள் பயிற்சி, குடிவரவு மற்றும் குடியகல்வு ஆகிய துறைகளில், பல புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X