2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

இ.போ.ச. பருத்தித்துறை பஸ் டிப்போவுக்கு பஸ்கள் வழங்குமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2010 ஜூலை 05 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை பஸ் டிப்போவுக்கு 30 பஸ்களை வழங்குமாறு போக்குவரத்து பிரதியமைச்சர் ருவான் திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து பிரதியமைச்சர் ருவான் திஸாநாயக்க அண்மையில்  பருத்தித்துறை பஸ் டிப்போவுக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது  ருவான் திஸாநாயக்கவிடம், பஸ் டிப்போ முகாமையாளர் கையளித்த மகஜரிலேயே இதற்கான  கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

பருத்தித்துறை டிப்போவில் தற்போது 33 பஸ்களே பயன்படுத்தக்கூடிய நிலையில் இருப்பதுடன், இதனால் மக்களுக்கு போதுமானளவில் சேவைகளை வழங்க முடியாதிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--