2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

இ.போ.ச பஸ் முற்றாக தீக்கிரை

Editorial   / 2020 மார்ச் 01 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

டீ.ஜீ.யுகதபால

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், ஹம்பாந்தோட்டையில் இருந்து  கொழும்பு நோக்கிப் பயணித்த, இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று, இன்று (01) மாலை முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

இமதுவ மற்றும் கொத்மாவ 110 ஆம் மைல்கல் பகுதியில் வைத்தே, இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

அம்பலாந்தோட்டை டிப்போவுக்குச் சொந்தமான n.c.0368 என்ற புதிய சொகுசு பஸ் ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

பஸ் தீபற்றியபோது, அதில் 20 பேர் இருந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுவதுடன்,  அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் தொடர்பில், அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார், இ.போ.ச பொறியியலாளர் பிரிவினர் ஆராய்ந்து வருகின்றனர்.

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X