2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

ஈ.பீ.டீ.பீ உட்பட ஏனைய கட்சிகள் தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேச்சு - டக்ளஸ்

Super User   / 2010 ஜூன் 24 , பி.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதில் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு அக்கறையிருந்தால் ஏனைய தமிழ் கட்சிகளுடன் பொது இணக்கப்பாட்டுக்கு உடன்படும்.

இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்மிரர் இணையதளத்திடம் சற்று முன்னர் தெரிவித்தார்.நேற்றுவியாழக்கிழமை மாலை தமிழ் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையொன்று ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இதுகுறித்து தமிழ் மிரர் இணையதளம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேள்வி எழுப்பியது.

தமிழ் பேசும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் மேர்கொள்லப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த டக்ளஸ் தேவானந்தா முதலில் தமிழ்கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படும் என்றார்.
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக இன்று முடிவெடுக்கப்பட்டதாகவும் ஈ.பீ.டீ.பீ செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேலும் குறிப்பிட்டார்.

இச்சந்திப்பின் போது தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஈபிஆர்எல்எப் (நாபா) அணியின் தலைவர் திரு சிறிதரன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு.சிவாஜிலிங்கம், திரு.சிறிகாந்தா,டெலோ அமைப்பின் தலைவர் திரு உதயன், ஈரோஸ் கட்சியின் செயலாளர் திரு பிரபா, மனித உரிமைளுக்கான ஆர்வலர் ஷெரீன், சேவியர் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • koneswaransaro Friday, 25 June 2010 07:41 PM

    மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி; வடக்கு கிழக்கு இணைந்த மாநிலம்; எங்கே இந்தக் கோட்பாடுகளையாவது முன்னெடுக்கப் பொது இணக்கப்பாட்டுக்கு வாருங்கள் பார்க்கலாம். சாமர்த்தியம் என்று சொல்லிக்கொண்டு சறுக்கி விழாதீர்கள். நாளைய சமூகம் தூற்றாத படி நடந்துகொள்ளுங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--