2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

உணவு ஒவ்வாமையால் 16 பேர் பாதிப்பு

Gavitha   / 2016 மார்ச் 29 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் 16 ஊழியர்கள், உணவு ஒவ்வாமை காரணமாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலை உணவை உட்கொண்ட பின்னர் குறித்த 16 பேரும் சுகயீனமுற்றதாகவும் அதன் பின்னரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் குறித்த தொழிற்சாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் இவர்களின் ஐந்து பேரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவர்கள் சீதுவை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .