2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

உறக்கத்திலிருந்த பெண்ணிடம் கொள்ளை

Yuganthini   / 2017 ஜூலை 23 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஏறாவூர், மீராகேணியிலுள்ள வீடொன்றில், உறக்கத்திலிருந்த பெண்ணிடம்  மூன்றரைப் பவுண் தங்கச் சங்கிலியைக் கொள்ளையிட்ட நபரை, ஏறாவூர் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

முகத்தைத் துணியொன்றால் மூடியவாறு, வீட்டின் கூரை ஓடுகளைக் கழற்றி, வீட்டுக்குள் குதித்த கொள்ளையன், உறக்கத்திலிருந்த பெண்ணின் சங்கிலியைக் கொள்ளையிட்ட போது, குறித்த பெண் போராடியதையடுத்து, குறித்த நபர், பெண்ணைத் தாக்கி விட்டு, அப்பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.

இச்சம்பவத்தில், பெண்ணின் கழுத்தில் காயம் ஏற்பட்டதையடுத்த, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டதுடன், முறைப்பாட்டுக்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட ஏறாவூர் பொலிஸார், மேற்குறிப்பிட்ட சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .