2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

உலக தமிழ் செம்மொழி மாநாடு இம்மாதம் 23முதல் 27 வரை கோவையில் நடைபெறும்

Super User   / 2010 ஜூன் 02 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 27வரையில் இந்தியாவின் கோவை நகரில் நடைபெறவுள்ளது.

பல்வேறு நாடுகளையும் சேர்ந்த தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என, பல இலட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர்.

இதேவேளை, செம்மொழி மாநாட்டுப் பணிகள் அனைத்தும் இம்மாதம் 15ஆம் திகதிக்குள் நிறைவு பெறும் என நிதி அமைச்சர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதியுமுள்ள கல்வெட்டுகள், சிற்பங்கள் ஆகியவற்றை செம்மொழி மாநாட்டு அரங்கில் பார்க்கக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு செம்மொழி மாநாட்டுப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 50ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிகாட்டினார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--