2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

உள்விவகாரங்களில் தலையிடும் நாடுகளை தடுக்குமாறு ஐ.தே.க வலியுறுத்து

Super User   / 2010 ஜூன் 28 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என  ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இன்று நடைபெற்ற வாரந்த முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் கயந்த கருணாதிலக இவ்வாறு வலியுறுத்தினார். 

இந்நிலையில், நல்லாட்சி, ஜனநாயகம் ஆகியன ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கயந்த கருணாதிலக குறிப்பிட்டார்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்டிருக்கும் நிபுணர்கள் குழுவை தமது கட்சி எதிர்ப்பதாகவும் அவர் கூறினார்.

எது எவ்வாறாயினும், படையினர் எந்தவிதமான குற்றச்செயல்களிலும் ஈடுபட்டிருக்கவில்லை எனவும் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

17ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதற்கு அரசாங்கம் தவறியிருப்பதுடன், சுயாதீன ஆணைக்குழு மீண்டும் செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் கயந்த கருணாதிலக குறிப்பிட்டார். 

இதேவேளை, அத்தியாவசியப் பொருள்களின் விலையை அரசாங்கம் அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டிய கயந்த கருணாதிலக, அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவிருக்கும் வரவு, செலவுத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கான சலுகைகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .