2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

உளவு பார்த்த குற்றச்சாட்டு; இலங்கை பிரஜைக்கு இந்தியாவில் சிறை

Editorial   / 2020 மார்ச் 16 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்காக உளவு தகவல்களை சேகரித்த குற்றச்சாட்டில் இலங்கை பிரஜையொருவருக்கு இந்திய நீதிமன்றம் 5 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், 20 ஆயிரம் இந்திய ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்குள் பயங்கரவாத நடவடிக்கையொன்றுக்கு தயார்ப்படுத்தல்களை செய்யதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் 2014ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டதுடன், அதற்கு முன்னர் இலங்கையில் இருந்தபோது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புகொண்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் தெரியவந்துள்ளது.

அருண் செல்வராஜா என்ற நபருக்கு இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X